iQOO 15: ₹72,999-க்கு ஆரம்பம்; Amazon Listing மூலம் விலை, வேரியன்ட்கள் லீக்

iQOO 15 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் Storage Variants விவரங்கள் Amazon இந்தியா இணையதளத்தில் லீக் ஆகியுள்ளன

iQOO 15: ₹72,999-க்கு ஆரம்பம்; Amazon Listing மூலம் விலை, வேரியன்ட்கள் லீக்

Photo Credit: iQOO

iQOO 15 இந்திய விலை Amazon-ல் லீக்: ₹72,999 முதல் ஆரம்பம்

હાઇલાઇટ્સ
  • iQOO 15-ன் ஆரம்ப விலை ₹72,999 ஆக இருக்கலாம்
  • சலுகைகளுடன் ₹65,000–70,000 வரம்பில் கிடைக்கும் என iQOO CEO குறிப்பளித்துள
  • இது Snapdragon 8 Elite Gen 5 சிப்செட், 7,000mAh Battery மற்றும் Alpha, Le
જાહેરાત

எல்லாரும் ஆவலோட எதிர்பார்த்துட்டு இருந்த iQOO 15 ஃபிளாக்ஷிப் போனுக்கான லேட்டஸ்ட் லீக் வந்திருக்கு. iQOO 15 வரும் நவம்பர் 26 அன்று இந்தியால லான்ச் ஆகுறது உறுதி. இந்த நிலையில, இப்போ போனோட விலை மற்றும் Storage Variants என்னன்னு Amazon இந்தியா இணையதளத்திலேயே லீக் ஆகிருக்கு. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்ட தகவல்படி, iQOO 15-ன் விலை இதுதான்,12GB RAM +256GB Storage: சுமார் ₹72,999,16GB RAM + 512GB Storage: சுமார் ₹79,999.இந்த விலை OnePlus 15-ன் விலைக்கு (₹72,999 மற்றும் ₹79,999) இணையா இருக்கு. iQOO India CEO நிபுன் மரியா, இந்த போனின் விலை வங்கிச் சலுகைகளோட சேர்த்து ₹65,000 முதல் ₹70,000-க்குள் இருக்கும்னு ஏற்கனவே ஒரு பேட்டியில சொல்லியிருந்தாரு. இதைப் பார்க்கும்போது, லீக் ஆன விலை சலுகைகள் இல்லாத அதிகபட்ச சில்லறை விலையா (MRP) இருக்க வாய்ப்பிருக்கு. ஆனா, போன iQOO 13-ன் (ஆரம்ப விலை ₹54,999) விலையை ஒப்பிடும்போது, இது பெரிய Price Hike தான். மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டோரேஜ் மற்றும் கலர்கள்:

இந்த லீக் ஆன லிஸ்டிங்ல iQOO 15 ரெண்டு கலர்கள்ல காட்டப்பட்டிருக்கு: Alpha மற்றும் Legend. இந்த இரண்டு மாஸ் கலர் ஆப்ஷன்கள்ல தான் இந்த போன் இந்தியால லான்ச் ஆகும்னு எதிர்பார்க்கப்படுது. மேலும், 12GB+256GB மற்றும் 16GB+512GB என இரண்டு முக்கிய Storage Variants தான் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம். இந்த iQOO 15-ன் மற்ற அம்சங்கள் சீனாவில் ஏற்கனவே லான்ச் செய்யப்பட்ட மாடலின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

● சிப்செட்: Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் (Octa-core, 4.6 GHz) மற்றும் கேமிங்கிற்காக Q3 Gaming Chip.
● பேட்டரி & சார்ஜிங்: 7,000mAh Battery உடன் 100W Wired Charging மற்றும் 40W Wireless Charging.
● டிஸ்பிளே: 6.85-இன்ச் 2K M14 OLED Display உடன் 144Hz Refresh Rate. இது Samsung-ன் லேட்டஸ்ட் M14 மெட்டீரியல் மூலம் உருவாக்கப்பட்டது.
● கேமரா: பின்னாடி Triple 50MP Camera செட்டப் (OIS உடன்) மற்றும் 32MP செல்ஃபி கேமரா.
● சாஃப்ட்வேர்: Android 16 அடிப்படையிலான OriginOS 6 உடன் 5 வருஷம் OS அப்டேட் மற்றும் 7 வருஷம் செக்யூரிட்டி அப்டேட் உறுதி.

iQOO நிறுவனம் Pre-Booking-ம் ஆரம்பிச்சுட்டாங்க. ₹1,000 கட்டி Priority Pass வாங்குறவங்களுக்கு TWS Earbuds மற்றும் Extended Warranty போன்ற சலுகைகள் கிடைக்கும்.

மொத்தத்துல, iQOO 15 ஒரு பவர்ஃபுல் ஃபிளாக்ஷிப் போனா Snapdragon 8 Elite Gen 5 மற்றும் 7000mAh Battery உடன் வந்தாலும், ₹72,999 என்ற விலையில இது OnePlus 15-க்கு ஒரு நேரடி போட்டியா இருக்கும்.

Gadgets 360 Staff રેસિડેન્ટ બોટ. જો તમે મને ઇમેઇલ કરશો, તો એક માણસ જવાબ આપશે. વધુ

જાહેરાત

જાહેરાત

#નવીનતમ વાર્તાઓ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »